பேங்க் அக்கவுண்ட் விவரம்: SRI PONNAMBALASWAMY A.PUTHUR CURRENT ACCOUNT: 43394622445 STATE BANK OF INDIA IFSC CODE: SBIN0000913 UPI ID:- sriponnambalaswamy@sbi UPI ID:- aputhur@sbi
நமது குலதெய்வ கோவில் கும்பாபிஷேகத்திற்காக பெயிண்டிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
நமது கோவிலுக்கு பெயிண்ட் வாங்கி கொடுத்தும் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருக்கும் நமது பங்காளிகள் 1. திரு. லோகநாதன் 2. திரு. ராஜி 3. திரு. நல்லப்பன் 4. திரு. கருப்பண்ணன் 5. திரு. செந்தில் 6. திரு. அய்யாதுரை 7. திரு. முத்து 8. திரு. சௌந்தர் 9. திரு. தங்கராஜ் ஆகிய பங்காளிகளுக்கு உணவு அருந்த அரிசி முதல் மளிகை சாமான்கள் வழங்கிய அனைத்து பங்காளிகளுக்கும், மற்றும் அமாவாசை பூஜை அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கிய அனைத்து பங்காளிகளுக்கும் நமது பங்காளிகள் சார்பாக….
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஸ்ரீ பொன்னம்பல சுவாமி அருள் பெற்று உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று மனதாரவும் மிக மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம்.
மேலே சொன்ன அந்த ஒன்பது பங்காளிகளுக்கும் மனமார வாழ்த்துக்கள். ஏனென்றால் உங்களால் தான் கும்பாபிஷேகம் வேலை நடைபெற அடித்தளமிட்டு உள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
1. நமது குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து 14 வருடம் இருக்கும் என நான் நினைக்கிறேன். வருடம் குறைந்தாலும் அல்லது அதிகரித்தாலோ என்னை மன்னிக்கவும்.
2. 14 வருடமாக நமது பங்காளிகள் மற்றும் பாசமிகு மாமன், மைத்துனர்கள் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு பூ வரி பணம் கொடுத்தீர்கள் என நீங்கள் நன்கு அறிவாயாக…
3. நான் இந்த பதிவை யார் மனதையும் புண்படுத்த பதிவு போடவில்லை
4. நான், நமது அனைத்து பங்காளிகள் ஒன்று சேர வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ் மற்றும் வாய்ஸ் கால் மூலம் உங்கள் அனைவரையும் இணைத்துள்ளேன். நமது குலதெய்வ கோவிலில் மாத மாதம் நடைபெறும் அமாவாசை பூஜை பங்காளியின் சார்பாக அன்னதானம் நடத்த முடிவு செய்து நான் மற்றும் பங்காளி திரு. பவுன்ராஜ் உடன் சிறப்பாக நீங்கள் வழங்கிய அன்னதான நன்கொடையின் பணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
5. நமது குல தெய்வத்திற்கு ஒரு இணையதளத்தை https://sriponnambalaswamy.com/ செய்துள்ளேன்.
6. நாம் அனைவரும் கடந்த ஆடி மாதம் 2024 திருவிழாவிற்கு நம் பங்காளிகள் மற்றும் மாமன் மைத்துனர்கள் வழங்கிய பூ வரி பணத்தில் இருந்து கடந்த ஆடி மாதம் 2024 நடைபெற்ற திருவிழாவிற்கான மொத்த செலவு நாம் அனைவரும் கொடுத்த பூ வரி பணத்தில் இருந்து செலவு செய்து போக மீதமுள்ள பூ வரி பணம் 3 லட்சத்து ஐம்பதாயிரம் உள்ளது என நம் பங்காளிகள் சொல்லி நான் தெரிந்து கொண்டேன் என்பதையும், நம் பங்காளிகளாக ஒரு சிலருக்கு தெரியும் என நான் நம்புகிறேன்
7. ஸ்ரீ பொன்னம்பல சுவாமி மற்றும் முத்து முனியப்பன் கோவில் உள்ள உண்டியல் இன்னும் பணம் எண்ணவில்லை என ஒரு சில பங்காளிகளுக்கு மட்டும் தெரியும் என நம்புகிறேன்.
8. கடந்த ஆடி மாதம் 2024 திருவிழா அணைத்து செலவு போக மீதமுள்ள பூ வரி பணம் மட்டும் 3 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நம் பங்காளிகளாக திரு காசி மற்றும் திரு ராஜமாணிக்கம் இருவரின் பெயரில் (JOINT ACCOUNT) ஜாயிண்ட் அக்கவுண்ட் ல் நமது கோவில் அருகில் உள்ள கூட்டுறவு சொசைட்டியில் மூன்று லட்சத்து 50 ஆயிரத்தில் போட்டு உள்ளார்கள் என நம் பங்காளிகள் சொல்லி தெரிந்து கொண்டேன் மற்றும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
9. இப்போது கோவில் பெயிண்டிங் வேலை செய்ய பணம் இல்லை என்பதை நம் பங்காளிகள் அனைவரும் நன்கு அறிவீர்கள்
10. ரூபாய் 3,50,000 பணம் எடுக்க முடியாமல் இரு தரப்பினரும் வருத்தத்தில் யார் பணத்தை வைத்துக்கொள்வது காவல் நிலையம் முதல் வருவாய் துறை அலுவலக கோட்டாட்சியர் வரை சென்று உள்ளார்கள் என்பதையும் நம் பங்காளிகள் அறிவீர்கள்.
11. கடந்த 14 வருடமாக நாம் அனைவரும் பூ வரி செலுத்திய பணம் கடந்த ஆடி மாத திருவிழா 2024 மீதமுள்ள 3 லட்சத்து 50 ஆயிரத்தில் ஏறத்தாழ ஒவ்வொரு வருடமும் மூன்று லட்சம் வீதம் இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன். நீங்களும் சிந்திப்பீர்கள் என நம்புகிறேன்.
12. ஆக மொத்தம் 14 வருடம் சுமார் ஏறத்தாழ 42 லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என நம்புகிறேன். நீங்களும் யோசிங்கள்
13. ஏனென்றால் நீங்கள் ஒவ்வொரு வருடமும் செலுத்திய பூ வரி பணம் அது.அதற்கான கணக்கின் இதுவரை தெரியப்படுத்தவில்லை என்பதை உங்களுக்கு தெரியும்.
14. அந்த சுமார் 45 லட்சத்திற்கான கணக்கை நம் பங்காளிகள் யாரிடமாவது இருந்தால் நம் பங்காளிகளின் வாட்ஸ்அப் (WhatsApp) குரூப்பில் தெரியப்படுத்தினால் நம் பங்காளிகள் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.
15. ஒரு சில பங்காளிகள் பணம் நோக்கத்திற்காக மட்டும் கோவில் நிர்வகிக்க சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள் என நான் நம்புகிறேன்.
16. நம் குலதெய்வ கோவிலில் மேம்படுத்த வேண்டும் என்ற ஒரு துளி எண்ணம் கூட இல்லை என்ற நான் நினைக்கின்றேன்.
17. 14 வருடமாக நாம் அனைவரும் பூ வரி பணம் செலுத்திய சுமார் 45 லட்சம் ரூபாய் பணம் நாம் பூ வரி செலுத்திய பங்காளிகளிடம் இருந்திருந்தால் கும்பாபிஷேகத்தை நல்ல முறையில் நம் பங்காளிகள் அனைவரும் குடும்பத்துடன் நடத்தி இருக்கலாம் என்று நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
18. நம் பங்காளிகளை பணத்திற்காக தொந்தரவு செய்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
19. நானும் இந்த பதிவை போட வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன். நான் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் நான் யார் மனதையும் புண்படுத்தவில்லை.
20. இருதரப்பினரும் ஒன்றிணைந்து பங்காளிகள் கொடுத்த கோவில் பணத்தை நேர்மையாக ஊழல் இல்லாமல் நிர்வாகம் செய்ய வேண்டும் என இரு தரப்பினரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
21. இதில் ஒரு தரப்பினர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக நம் பங்காளிகளிடம் நேரில் சென்று பணம் கேட்கலாம் என்று நினைத்தால் இன்னொரு தரப்பினர் தனியாக பணம் வசூல் செய்ய தயாராக இருக்கிறார்கள் என நம் பங்காளிகள் ஒரு சிலர் கூறுகிறார்கள்.
22. நம் பங்காளிகள் கடந்த 14 வருடங்களாக நாம் நம் குலதெய்வ கோவிலுக்கு செலுத்திய பூ வரி மற்றும் இதர காணிக்கைகள் நம் குலதெய்வ கோவிலுக்கு முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள்.
23. நம் பங்காளிகளாக உங்களை நேரில் வந்து குலதெய்வம் கோவிலுக்கு பூ வரி பணம் வாங்குவதற்காக செலவுத் தொகையும் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவாகிறது என நிர்வாகிகள் கணக்கு காண்பிக்கிறார்கள்.
24. நம் பங்காளிகள் கொடுத்த பூ வரி பணம் மற்றும் இதர காணிக்கை பணம் அதற்கான வரவு செலவு கணக்குகளை நம் பங்காளிகளுக்கு தெரியப்படுத்த கூடாது என்ற ஒரு சில நிர்வாகிகள் சொல்வதாக என்னிடம் ஒரு சில பங்காளிகள் கூறியுள்ளார்கள் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
25. நம் பங்காளிகள் கொடுத்த வரி பணம் மற்றும் இதர காணிக்கை பணத்திற்கான வரவு செலவு கணக்குகளை நமது பங்காளிகளுக்கு தெரியப்படுத்த கூடாது என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.
26. பணத்திற்காக அவர்கள் நம்மிடம் வந்து கேட்பார்கள் ஆனால் கணக்குகளை மட்டும் காண்பிக்க மாட்டார்கள் என்பதை எந்த விதத்தில் நியாயம்.
27. இதை எல்லாம் நான் பல நாட்களாக நன்கு யோசித்து நம் பங்காளிகள் சார்பாக இனி வரும் நாட்களில் நாம் நமது குலதெய்வ கோவிலுக்கு மிகுந்த பயபக்தியுடன் கொடுக்கும் ஒவ்வொரு ஒத்த ரூபாயும் நேர்மையாகவும் அனைத்து பங்காளிகளுடன் வரவு செலவு கணக்கை அனைத்து நம் பங்காளிகளின் பார்வைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும், இரு தரப்பு பங்காளிகள் இல்லாமல் நாம் அனைவரும் ஒரே குலதெய்வ பங்காளிகள் என நினைத்து ஒரு தரப்பினராக ஒன்றிணைந்து பின்வரும் நாட்களில் நம் குலதெய்வ பங்காளிகள் ஆகிய நீங்கள் ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் வாரி வழங்கும் உங்கள் பணத்தை நம் கோவிலுக்கு ஒத்த ரூபாய் ஆக இருந்தாலும் உங்களிடம் WHATSAPP - ல் தெரிவித்து நேர்மையான நியாயமான முறையில் செலவு செய்திடவும்,
28. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கும்பாபிஷேகத்திற்கான பெயிண்டிங் வேலை செய்திட பணம் பெற்று நம் பங்காளிகளாக உங்கள் முன்னிலையில் நமது வாட்ஸ் அப் குரூப்பில் தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும்
29. நான் ஸ்ரீ பொன்னம்பல சுவாமி ஏ புதூர் (SRI PONNAMBALA SWAMY A PUTHUR) என்ற பெயரில் நடப்பு கணக்கு (CURRENT ACCOUNT) துவக்கி உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
30. நீங்கள் அனைவரும் முதலில் கோவில் பெயிண்டிற்காக நன்கொடை வழங்கும்மாறு பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
31. பெயிண்டிங் வேலை பணி முடிந்தவுடன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்க நாம் அனைத்து பங்காளிகளும் நமது கோவிலில் ஒன்று சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
பேங்க் அக்கவுண்ட் விவரம்: SRI PONNAMBALASWAMY A.PUTHUR CURRENT ACCOUNT: 43394622445 STATE BANK OF INDIA IFSC CODE: SBIN0000913 UPI ID:- sriponnambalaswamy@sbi மற்றும் UPI ID:- aputhur@sbi
1. பங்காளிகள் வழங்கிய பணத்திற்காக பேங்க் ஸ்டேட்மென்ட் வாட்ஸ் அப் குரூப்பில் தெரியப்படுத்தப்படும் என்பதை உறுதி அளிக்கிறேன்
2. ரசீதை வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
3. நம் பங்காளிகள் வழங்கிய பணத்தின் செலவினை எதற்க்காக என்ன செலவிற்கு கொடுக்கப்பட்டது என்ற செலவு கணக்கு பணம் பெரும் பங்காளி அவர் செலவு கணக்கிற்கு பொறுப்பு என்றும் அவர் வாட்ஸ்அப் குரூப்பில் பில் உடன் தெரியப்படுத்த கடமைப்பட்டவர் அவர் என்பதை நம் பங்காளிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
4. ஒரே குலதெய்வ பங்காளிகள் என நினைத்து இருதரப்பு இல்லாமல் ஒரு தரப்பாக பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து இனி வரும் காலங்களில் அனைத்து பங்காளிகளும் ஒன்றுடன் ஒன்று பட்டு முன்னின்று கும்பாபிஷேகம் நடத்த நம் இரு தரப்பு பங்காளிகளை பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் நன்றியுடன்… பொ.முருகன், தெத்திகிரிபட்டி போன்: 80 150 80 150 மற்றும் 850 80 850 80
நீங்கள் அனைவரும் முதலில் கோவில் பெயிண்டிற்காக நன்கொடை வழங்கும்மாறு பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
பெயிண்டிங் வேலை பணி முடிந்தவுடன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்க நாம் அனைத்து பங்காளிகளும் நமது கோவிலில் ஒன்று சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
ஒரே குலதெய்வ பங்காளிகள் என நினைத்து இருதரப்பு இல்லாமல் ஒரு தரப்பாக பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து இனி வரும் காலங்களில் அனைத்து பங்காளிகளும் ஒன்றுடன் ஒன்று பட்டு முன்னின்று கும்பாபிஷேகம் நடத்த நம் இரு தரப்பு பங்காளிகளை பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் நன்றியுடன்…
பொ.முருகன், தெத்திகிரிபட்டி
போன்: 80 150 80 150 / 850 80 850 80